கிளிநொச்சி பகுதியில் தாயினால் கைவிடப்பட்ட நிலையில் முதலையின் தாக்குதலுக்கு உள்ளான 5 மாதங்களே பூர்த்தியான யானைக்குட்டி ஒன்று மீட்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி வனப்பகுதிக்கு அண்மையில் இந்த யானைக் குட்டியை பிரதேசவாசிகள் அவதானித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, குறித்த பகுதிக்கு வந்த கிளிநொச்சி மாவட்ட வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் யானைக் குட்டியை மீட்டுள்ளதுடன், வனஜீவராசிகள் திணைக்கள வைத்தியர்களால் யானைக் குட்டிக்கு சிகிச்சைகளும் வழங்கப்படுகின்றன.
கிளிநொச்சி வனப்பகுதியிலிருந்து இந்த யானைக் குட்டி வந்துள்ளதாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த யானைக் குட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகின்றது.
யானைக் குட்டியின் பாதத்தை முதலை கடித்துள்ள நிலையில், யானைக் குட்டிக்கு சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மிருக வைத்தியர் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், குறித்த யானைக் குட்டியின் உடல்நிலை தேறி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
No comments:
Post a Comment