சுமந்திரனே டயஸ்போராவின் ஏற்பாட்டாலராக செயற்படுகின்றார் - கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றச்சாட்டு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 17, 2018

சுமந்திரனே டயஸ்போராவின் ஏற்பாட்டாலராக செயற்படுகின்றார் - கெஹெலிய ரம்புக்வெல்ல குற்றச்சாட்டு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் போன்றவர்களே நேற்றுமுன்தினம் நாடாளுமன்றதில் இடம்பெற்ற சம்பவங்களுக்கு காரணம் என அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

கண்டியில் நேற்று (சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே இராஜாங்க அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், “கரு ஜயசூரிய நினைத்தவாறு நிகழ்ச்சி நிரலை தயாரித்து கீழ் தரமாக செயற்பட முயற்சித்தால் அதற்கு எதிர்ப்பை தெரிவிப்பதில் என்ன தவறு.

கட்சி தலைவர்களின் கூட்டத்தில் சபாநாயகர் ஏகதிபத்தியவாதியாக செயற்பட்டார். சபையை ஒழுங்காக நடத்துவதனை அவர் எட்டி உதைத்தால் நாம் என்ன செய்வது. கொழும்பில் உள்ள அனைத்து ரவுடிகளுக்கும் கழுத்து பட்டியணிவித்து நேற்றுமுன்தினம் நாடாளுமன்ற கெலரில் அமரவைத்தது யார்?

ஆகவே இன்று நாட்டில் ஏற்பட்டுள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் சபாநாயகர் கரு ஜயசூரியவே காரணம். ஐரோப்பிய ஒன்றியம் எம்மை நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கோருகின்றது.

அவர்கள் நிளைத்தவாறு எம்மை ஆட்டுவிக்க முடியாது. காரணம் இது அந்த நாட்டு நாடாளுமன்றம் இல்லை. அவ்வாறு டயஸ்போரா மக்கள் பணம் கொடுத்து இதனை செய்விக்கின்றனர்.

சுமந்திரனே இதன் ஏற்பாட்டாலராக செயற்படுகின்றார். நாடாளுமன்றில் எதிர்த்தரப்பில் அமர்ந்திருக்கும் சுமந்திரனே ஆளும் கட்சியை போல் செயற்படுகின்றார்.

ஆகவே நேற்றுமுன்தின நாடாளுமன்ற நிலைமைக்கு கரு ஜயசூரியவே முழு காரணம். நம்பிக்கையில்லா பிரேரணையை நிராகரித்ததாக ஜனாதிபதி அன்று மாலை கூறினார். எனவே சட்டரீதியாக இதனை செய்தால் மாத்திரமே அதனை ஏற்றுக்கொள்வோம்“ என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment