ஓட்டமாவடி - தியாவட்டவானில் மிகக்குறைந்த வாடகையில் தங்குமிட வசதி - News View

About Us

About Us

Breaking

Thursday, November 29, 2018

ஓட்டமாவடி - தியாவட்டவானில் மிகக்குறைந்த வாடகையில் தங்குமிட வசதி

தூரப் பிரதேசங்களிலிருந்து பாசிக்குடா மற்றும் ஏனைய சுற்றுலாத்தலங்களுக்கு வருகை தரும் வரும் உல்லாசப்பயணிகள், வியாபாரம் நோக்கம் கருதி வருகை தருவோர் மற்றும் ஏனையோரின் நன்மைகருதி பாதுகாப்பான சூழலில் தங்கும் அறைகள் ஓட்டமாவடி - கொழும்பு பிரதான வீதியிலுள்ள தியாவட்டவான் ஹாலித் பின் வலீத் ஜும்ஆ பள்ளிவாயலின் கீழியங்கும் சார்ஜா ஹெஸ்ட் ஹவுஸினால் (Sharjah Guest House) வாடகைக்கு விடப்படுகின்றன. 

இயற்கையான ஆற்றங்கரை சூழல், போதுமான வாகனத்தரிப்பிட வசதியுடன் நான்கு பேர் தங்கக்கூடிய வகையில் உள்ளக கழிவறைகளுடன் கூடிய இவ்வறைகளுக்கு ஒரு நாளைக்கு மிகக்குறைந்த கட்டணமாக சுமார் 600 ரூபாய்கள் மாத்திரமே வாடகையாக அறவிடப்படுகின்றன.
ஓட்டமாவடி-கொழும்பு பிரதான வீதியின் மிகவும் பிரசித்தி பெற்ற ஓட்டமாவடி பாலம், ஆற்றங்கரையோரம் ஓட்டமாவடி பிரதான சந்தையையும், தியாவட்டாவான் ஜும்ஆப் பள்ளிவாயலையும் அண்மித்துக் காணப்படுகின்றன.

தியாவட்டவான் ஹாலித் பின் வலீத் ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு நிரந்தர வருமானத்தைப் பெறுவதை இலக்காகக் கொண்டு நாடத்தப்படும் இவ்வறைகள் மூலம் கிடைக்கப்பெறும் வருமானம் நிரந்தர சொத்தொன்றை கொள்வனவு செய்யும் நோக்கில் அதற்கான கணக்கில் வைப்பிலிடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எனவே, இவ்வறைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள கீழ்க்குறிப்பிடப்படும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுங்கள்.

077 9057177,   076 2657810,   0778683722,   0778883665

றிஸ்வான் இப்றாஹீம் 

No comments:

Post a Comment