அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில், மரணதண்டனை விதிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதியொருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மரணதண்டனை விதிக்கப்பட்ட மேலும் இரு கைதிகளால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக, சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோக்கந்தர பகுதியைச் சேர்ந்த 6 பேரை கொலை செய்த குற்றச்சாட்டில் மரணதண்டனை விதிக்கப்பட்டு அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவராவார்.
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு மரணதண்டனை கைதிகளும் குறித்த சிறைச்சாலையின் பிறிதொரு பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களத்தினர் இணைந்து முன்னெடுக்கின்றனர்.
No comments:
Post a Comment