இலங்கையின் அரசியல் நிலைமை குறித்து அவுஸ்திரேலியா வௌியிட்டுள்ள அறிக்கை - News View

About Us

About Us

Breaking

Thursday, November 1, 2018

இலங்கையின் அரசியல் நிலைமை குறித்து அவுஸ்திரேலியா வௌியிட்டுள்ள அறிக்கை

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலையை தொடர்ந்து அவதானித்து வருவதாக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் மரைஸ் பய்னே தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கரமசிங்கவை பதவி நீக்கம் செய்தமை தொடர்பாகவும், அதனைத் தொடர்ந்து இடம்பெற்று வரும் போராட்டங்கள் தொடர்பாகவும் நாம் கவனம் செலுத்தி வருகின்றோம். 

எனவே நாட்டில் ஜனநாயக கொள்கைகளை தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும் எனவும் அவர் வழியுறுத்தியுள்ளார். 

இலங்கையின் நீண்டகால நட்பு நாடு என்ற வகையில் நாட்டில் ஏற்படும் அரசியல் மாற்றங்களை அவுஸ்திரேலியா உன்னிப்பாக அவதானித்து வருகிறது எனவும் குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment