சபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 17, 2018

சபாநாயகர் உள்ளிட்ட சர்வ கட்சி சந்திப்புக்கு ஜனாதிபதி அழைப்பு

பாராளுன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளின் பங்குபற்றுதலுடன் சர்வ கட்சி சந்திப்பொன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இன்று (18) பி.ப. 5.00 மணிக்கு ஜனாதிபதி அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.

பாராளுமன்றத்தில் கடந்த சில நாட்களாக இடம்பெற்ற அரசியல் அமைதியின்மை மற்றும் குழப்ப நிலையை முடிவுக்கு கொண்டுவந்து பாராளுமன்ற நடவடிக்கைகளை சிறப்பாக முன்னெடுப்பதற்கு அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இடையில் உடன்பாடொன்றை ஏற்படுத்தும் நோக்குடன் ஜனாதிபதியினால் இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல் கட்சிகளினதும் தலைவர்களுக்கும் இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கும் இதற்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment