இன்று மாலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சர்வகட்சி சந்திப்பை தொடர்ந்து விசேட நிகழ்வொன்றும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.
அதாவது இன்று தனது 73ஆவது பிறந்த தினத்தைக் கொண்டாடும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் நோக்கில் ஜனாதிபதியால் பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கேக் வெட்டி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு வாழ்த்து தெரிவித்ததாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment