மாலைத்தீவின் 7ஆவது ஜனாதிபதியாக இப்ராஹிம் மொஹம்மட் சொலி பதவியேற்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, November 17, 2018

மாலைத்தீவின் 7ஆவது ஜனாதிபதியாக இப்ராஹிம் மொஹம்மட் சொலி பதவியேற்பு

மாலைத்தீவின் 7ஆவது ஜனாதிபதியாக இப்ராஹிம் மொஹம்மட் சொலி (Ibrahim Mohamed Solih) இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

புதிய ஜனாதிபதியின் பதவியேற்பு விழாவில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டுள்ளார்.

7 வருடங்களின் பின்னர் இந்திய பிரதமர் ஒருவர் மாலைத்தீவு செல்லும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கு முன்னர், கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மாலைத்தீவு சென்றிருந்தார்.

மாலைத்தீவில் கடந்த 7 வருடங்களாக நிலவிய அரசியல் நெருக்கடியே இதற்கான காரணமாகும்.

மாலைத்தீவில் கடந்த செப்டம்பர் 23 ஆம் திகதி நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தலில், ஒன்றிணைந்த எதிர்க்கட்சி சார்பில் வேட்பாளராகக் களமிறங்கிய இப்ராஹிம் மொஹம்மட் சொலி, தேர்தலில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார்.

இதன்மூலம், மாலைத்தீவில் அப்துல்லா யாமீனின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

No comments:

Post a Comment