இலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடைபெற்ற 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 57 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
3 விக்கெட்டுகள் மீதமிருக்க 71 எனும் வெற்றி இலக்கினை நோக்கித் துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய இலங்கை அணி போட்டியின் 5 ஆம் நாளான இன்று (18) போட்டி ஆரம்பித்து 30 நிமிடங்களுக்குள் இறுதி 3 விக்கட்டுக்களையும் இழந்து தோல்வியைத்தழுவியது.
குறிப்பாக இலங்கை வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்த நிலையில் திக்வெல்ல மற்றும் அகில தனஞ்சய ஜோடி சிறப்பாக ஓட்டங்களைக் குவிக்க ஆரம்பித்த போதிலும் இன்றைய நாளின் (18) முதல் விக்கெட்டாக திக்வெல்ல , மொயின் அலியின் பந்து வீச்சில் ஆட்டமிழக்க இலங்கை அணியின் நம்பிக்கை தவிடுபொடியாகியது.
மேலும் 3 ஓவர்களுக்கள் இலங்கை அணியின் இறுதி 2 விக்கெட்டுக்களும் வீழ இங்கிலாந்து வெற்றியை சுவைத்தது.
இலங்கை அணி ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் மீண்டுமொரு முறை சொதப்பிய நிலையில் அஞ்சலோ மெத்திவ்ஸ் மற்றும் திமுத் கருணாரத்ன ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் இலங்கை அணியின் கை ஓங்கத்தொடங்கியது.
இங்கிலாந்து அணியின் மிகச்சிறப்பான களத்தடுப்பு காரணமாக திமுத் கருணாரத்ன ஆட்டமிழந்ததைத் தொடர்ந்து நேற்றைய நாள் (17) தேநீர் இடைவேளையின் பின்னர் மெத்திவ்ஸும் ஆட்டமிழக்க இலங்கை அணி தோல்வியின் பக்கம் சாய்ந்தது.
நேற்றைய நாளின் (17) இறுதி விக்கெட்டாக தில்ருவன்்பெரேரா வீழ மழை காரணமாக போட்டி முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. களத்தில் திக்வெல்ல ஆட்டமிழக்காது இருந்தமை இலங்கை அணிக்கு சற்று ஆறுதலாக இருந்தது.
இருந்த போதிலும் இங்கிலாந்து அணியின் சுழலில் வீழ இலங்கை அணி தோல்வியைத்தழுவியதுடன் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனும் கணக்கில் கைப்பற்றியது. இதற்கு முன்னதாக இங்கிலாந்து அணி இலங்கை மண்ணில் 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் தொடரை மாத்திரமே கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி சார்பில் அஞ்சலோ மெத்திவ்ஸ் 88 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 52 ஓட்டங்களையும் ரொஷேன் சில்வா 37 ஓட்டங்களையும் நிரோஷன் திக்வெல்ல 35 ஓட்டங்களையும் பெற்றனர்.
குசல மெண்டிசின் மோசமான துடுப்பாட்டம் இப்போட்டியிலும் தொடர்கின்றமைஇலங்கை அணிக்கு மிகுந்த பலவீனத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது வெளிப்படை உண்மையாகும். குறிப்பாக குசல் இரு இன்னிங்ஸிலும் தலா ஒரு ஓட்டத்தை மாத்திரம் குறிப்பிடத்தக்கது. இவர் தவிர தனஞ்சய டி சில்வா மற்றும் கெளசால் சில்வா ஆகியோரும் இரு டெஸ்ட் போட்டிகளிலும் மோசமாக ஆடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக 290 ஓட்டங்களைக் குவித்தது. ஜோஸ் பட்லர் 63 ஓட்டங்களையும் சாம் குர்ரான் 64 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் தில்ருவன் பெரேரா 4 விக்கெட்டுகளையும் மலிந்த புஷ்பகுமார 3 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி தமது முதல் இன்னிங்ஸுக்காக 336 ஓட்டங்களைப் பெற்றது. ரொஷேன் சில்வா 85 ஓட்டங்களையும் திமுத் கருணாரத்ன 63 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 59 ஓட்டங்களையும் பெற்றனர். பந்து வீச்சில் ஜெக் லீச் மற்றும் ஆதில் ரஷீத் தலா 3 விக்கெட்டுகளையும் மொயின் அலி 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
தொடர்ந்து தமது 2 ஆவது இன்னிங்ஸுக்காக அணித்தலைவர் ஜோ ரூட்டின் சத்த்தின் உதவியுடன் இங்கிலாந்து அணி 346 ஓட்டங்களைக் குவித்தது. ஜோ ரூட் 124 ஓட்டங்களைப் பெற்றதுடன் பென் போக்ஸ் ஆட்டமிழக்காது 65 ஓட்டங்களையும் ரோரி பர்ன்ஸ் 59 ஓட்டங்களையும் கைப்பற்றினர். பந்து வீச்சில் அகில தனஞ்சய 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
போட்டியின் சிறப்பாட்டக்காரராக ஜோ ரூட் தெரிவு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்குமிடையிலான 3 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (23) கொழும்பில் நடைபெறவுள்ளது.
முதல் இன்னிங்ஸ்
இங்கிலாந்து 285+5/10 (75.4)
சேம் குர்ரன் 64 (119)
ஜோஸ் பட்லர் 63 (67)
ரொரி பேர்ன்ஸ் 43 (81)
தில்ருவன் பெரேரா 4/61
மலிந்த புஷ்பகுமார 3/89
அகில தனஞ்சய 2/80
இலங்கை 336/10 (103.0)
ரொஷேன் சில்வா 85 (174)
திமுத் கருணாரத்ன 63 (125)
தனஞ்சய டி சில்வா 59 (98)
ஜெக் லீச் 3/70
ஆதில் ரஷீத் 3/75
மொயின் அலி 2/85
இரண்டாம் இன்னிங்ஸ்
இங்கிலாந்து 324/9 (76)
ஜோ ரூட் 124 (146)
ரோரி பர்ன்ஸ் 59 (33)
பென் போக்ஸ் 51*
அகில தனஞ்சய 6/106 (23)
தில்ருவன் பெரேரா 2/87 (19)
மலிந்த புஷ்பகுமார 1/97 (26)
இலங்கை 243/10 (74.0)
அஞ்சலோ மெத்திவ்ஸ் 88 (137)
திமுத் கருணாரத்ன 54 (90)
ரொஷேன் சில்வா 37 (95)
நிரோஷன் திக்வெல்ல 35 (43)
ஜெக் லீச் 5/83 (28.0)
மொயின் அலி 4/72 (19)
ஆதில் ரஷீத் 1/52 (17)
No comments:
Post a Comment