அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸை மேலும் பலப்படுத்தும் நோக்கிலும் அந்தப் பகுதியில் வைத்தியசாலை உள்ளிட்ட பல இடங்களில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பது தொடர்பிலும் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் தலைமையில் அங்கு கட்சி ஆதரவாளர்களுடன் கடந்த வெள்ளிக்கிழமை விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போது பல்வேறு பிரச்சினைகள், அபிவிருத்தி பணிகள் பற்றி விரிவாக அலசப்பட்டன. குறிப்பாக, தெஹியத்தகண்டி ஆதார வைத்தியசாலையை அபிவிருத்தி செய்வது பற்றி இங்கு விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அந்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை பற்றியும் அந்த நிதியைக் கொண்டு எவ்வாறான அபிவிருத்திப் பணிகளை மேற்கொள்வது என்றும் அந்த வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளுடனும் கலந்துரையாடல் நடத்தப்பட்டது.
தெஹியகண்டியில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஆதரவுத் தளம் ஒன்று இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அந்தத் தளத்தை மேலும் பலப்படுத்துவதற்கும் அந்தப் பகுதியில் அபிவிருத்தி பணிகளை முன்னெடுப்பதற்கும் சுகாதார பிரதி அமைச்சர் பைசல் காசீம் நடவடிக்கை எடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதி அமைச்சரின் ஊடகப் பிரிவு
No comments:
Post a Comment