கட்டுகம்பல தேர்தல் தொகுதி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அமைப்பாளரும் குருணாகல் மாவட்ட மத்திய குழுவின் உயர்பீட செயளாலருமாகிய பெளசுல் அமீர் அவர்களின் வேண்டுகோளின் பேரில் மும்மண்ண முஸ்லிம் வித்தியாலயத்துக்கான நுழைவாயில் அமைப்பதற்கான நிதியை கெளரவ வடமேல் மாகாண சபை உறுப்பினரும் உயர் நீதிமன்ற சட்டத்தரணியுமான ரிஸ்வி ஜவ்ஹர்ஷா தனது பண்முகப்படுத்தப்பட்ட நிதியில் இருந்து பெற்றுக் கொடுத்து கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றது.
நுழைவாயில் கட்டுமானப் பணிகளை 2018.09.29 சனிக்கிழமை மாவட்டத் தலைவர் உற்பட மத்திய குழு உறுப்பினர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அங்கு கருத்து தெரிவித்த மாகாண சபை உறுப்பினர் பாடசாலைக்கான கட்டடம் பெறுவதற்கான முயற்சி தொடர்ந்தும் நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் இன்ஷாஅல்லாஹ் அடுத்த வருடம் கட்டடத்தை பெற்றுத்தர முயற்சிப்பதாகவும் அதிபரிடம் குறிப்பிட்டார்.
மேற்படி கோறிக்கைகள் மும்மான மற்றும் வேத்தேவ அமைப்பாளர்களான லாபிர் ஷாப், நபாஸ் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க அமைப்பாளறூடாக முன்வைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment