குறித்த பெண் தனது வீட்டில் கம்பியை பாவித்து தேங்காய் பறித்துக்கொண்டிருந்தபோது தேங்காய் தலையில் விழுந்து அவ்விடத்திலேயே மயக்கமுற்றதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
அதனை அடுத்து அருகிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
இவ்வாறு தலையில் தேங்காய் விழுந்த பெண் இரண்டு பிள்ளைகளின் தாயான ரிஷாந்தி சந்தமாலி (28 வயது) எனவும் தெரியவருகின்றது.
பெண்ணின் தலையில் சிறிய காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் சீட்டி ஸ்கேனுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
அப்துல்சலாம் யாசீம்
No comments:
Post a Comment