புலமைப்பரிசில் பரீட்சை : தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்கள் - News View

About Us

About Us

Breaking

Friday, October 5, 2018

புலமைப்பரிசில் பரீட்சை : தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்கள்

கடந்த 2018 ஓகஸ்ட் 05 ஆம் திகதி இடம்பெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இன்று (05) வெளியிடப்பட்டன. பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில், 199 புள்ளிகள் பெற்ற இரு மாணவர்கள் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர்.

பிலியந்தலை, சோமவீர சந்திரசிறி வித்தியாலய மாணவன் புமித் மெத்னுல் விதானகே, வியாங்கொடை, புனித மேரி மகா வித்தியாலய மாணவன் குருகுலசூரிய சனூப திமத் பெரேரா ஆகியோரே அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளனர்.

அகில இலங்கை ரீதியில், 198 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தைப் பெற்ற மூன்று மாணவர்களில் இருவர் தமிழ் மொழி மூலம் பரீட்சைக்கு தோற்றியிருந்தனர்.

யாழ்ப்பாணம் இந்து கல்லூரி கனிஷ்ட வித்தியாலய மாணவன் மகேந்திரன் திகலொழிபவன், மற்றும் சாவகச்சேரி கனிஷ்ட வித்தியாலய மாணவி நவஸ்கன் நதி ஆகிய இருவரும் 198 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.

தமிழ் மொழி மூலம் அகில இலங்கை ரீதியில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்றவர்கள்

No comments:

Post a Comment