பதுளை – செங்கலடி வீதியின் 2ஆம் கட்ட அபிவிருத்திப் பணி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, September 2, 2018

பதுளை – செங்கலடி வீதியின் 2ஆம் கட்ட அபிவிருத்திப் பணி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைப்பு

சவூதி கடன் உதவி மூலம் நிர்மாணிக்கப்படும் பதுளை – செங்கலடி வீதியின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் இன்று (02) ஞாயிற்றுக்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் பதியதலாவ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

அபிவிருத்திக்கான சவூதி கடன் நிதி உதவி மூலம் 9600 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படும் பதுளை செங்கலடி வீதியின் பிபிலை தொடக்கம் செங்கலடி வரையிலான 87 கிலோ மீற்றர் தூரமான இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணியினை ஆரம்பித்து வைக்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு பதியதலாவ நகரில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி அமைச்சர் கபீர் ஹாசீம் மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், அமைச்சர் தயா கமகே, பிரதியமைச்சர்களான பைஸல் காசிம், அனோமா கமகே மற்றும் ஶ்ரீயானி விஜயவிக்ரம உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment