கனடா தூதுவரை நாட்டை விட்டு வெளியேற்றியது சவுதி அரேபியா - இரு நாட்டு உறவில் விரிசல் - News View

About Us

About Us

Breaking

Monday, August 6, 2018

கனடா தூதுவரை நாட்டை விட்டு வெளியேற்றியது சவுதி அரேபியா - இரு நாட்டு உறவில் விரிசல்

தனது உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதாக கூறி கனடா தூதுவர் 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என சவுதி அரேபியா அரசு உத்தரவிட்டுள்ளது. 

சவுதி அரேபியாவில் சமீபத்தில் சில பெண் மனித உரிமை ஆர்வலர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சர்வதேச அளவில் பல விருதுகளை வென்ற மனித உரிமை ஆர்வலர் சமர் பதாவி உள்ளிட்டோர் கைதுக்கு எதிராக கனடா அரசு குரல் எழுப்பியது.

மேலும், கைது செய்யப்பட்ட மனித உரிமை ஆர்வலர்களை சவுதி உடனடியாக விடுவிக்க வேண்டும் என கனடா கேட்டுக்கொண்டது. கனடாவின் கோரிக்கையால் ஆத்திரமடைந்த சவுதி, ‘தங்கள் நாட்டு உள்விவகாரங்களில் தலையிட வேண்டாம்’ என கனடாவுக்கு பதிலடி கொடுத்துள்ளது. 

வார்த்தைகளுடன் நிறுத்தாமல், சவுதிக்கான கனடா தூதுவரை 24 மணி நேரத்தில் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என வெளியுறவு துறை உத்தரவிட்டுள்ளது. மேலும், கனடாவில் இருக்கும் தனது நாட்டு தூதுவரையும் சவுதி திரும்ப பெற்றுக்கொண்டது. இதனால், இரு நாடுகள் இடையேயான உறவில் விரிசல் விழுந்துள்ளது.

No comments:

Post a Comment