சென்னை மெரினா கடற்கரையில் கருணாநிதி உடலை அடக்கம் செய்ய இடம் ஒதுக்கும்படி தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
திமுக தலைவர் கருணாநிதியை சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா சமாதி அருகே அடக்கம் செய்ய அனுமதிக்க வேண்டும் என திமுக தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால், மெரினாவில் நினைவிடம் ஒதுக்குவதில் பல சட்ட சிக்கல்கள் உள்ளதால், சென்னை காந்தி மண்டபம் அருகே 2 ஏக்கர் நிலம் ஒதுக்க அரசு தயாராக இருப்பதாக தலைமை செயலாளர் அறிவித்தார்.
தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிராக சென்னை ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷிடம் திமுக சார்பில் முறையிடப்பட்டது. இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது. அப்போது அரசுத் தரப்பு மற்றும் திமுக தரப்பு வழக்கறிஞர் காரசாரமாக வாதிட்டனர்.
அப்போது சட்ட சிக்கல்கள், வலுக்கு நிலுவை என்றீர்கள்? இப்போது வழக்குகள் இல்லாததால் எதிர்ப்பது ஏன்? என அரசுத் தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். காமராஜருக்கு நினைவிடம் அமைக்க மெரினாவில் இடம் கோரவில்லை என்றும், ஜானகியம்மாள் இறந்தபோதும் முறையான அனுமதி கோரப்படவில்லை என்றும் நீதிபதிகள் கூறினர்.
எனினும் பல்வேறு காரணங்களைக் கூறிய அரசுத் தரப்பு வழக்கறிஞர், கருணாநிதிக்கு மெரினாவில் இடம் ஒதுக்க முடியாது என தொடர்ந்து பிடிவாதம் செய்தார். திமுக தரப்பும் எதிர்வாதம் செய்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள் வாசித்தனர். அப்போது, திமுக தலைவர் கருணாநிதியின் உடலை அடக்கம் செய்ய மெரினாவில் இடம் ஒதுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவு பிறப்பித்தனர்.
இதனுடன் தொடரான செய்திகளை பார்வையிட
https://www.newsview.lk/2018/08/blog-post_925.html
http://www.newsview.lk/2018/08/blog-post_361.html
http://www.newsview.lk/2018/08/blog-post_448.html
No comments:
Post a Comment