மருந்து தட்டுப்பாடு இருந்தால் எழுத்து மூலம் அறிவிக்கவும் சுகாதார அமைச்சர் ராஜித - News View

About Us

About Us

Breaking

Friday, August 31, 2018

மருந்து தட்டுப்பாடு இருந்தால் எழுத்து மூலம் அறிவிக்கவும் சுகாதார அமைச்சர் ராஜித

வைத்தியசாலைகளில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாயின் அது சம்பந்தமாக அனைத்து தகவல்களையும் அமைச்சுக்கு எழுத்து முலம் வழங்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார். 

இந்த தகவல்களை அடிப்படையாக வைத்து தேவையான நடவடிக்கையை எடுப்பதற்கு தயார் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

வைத்தியசாலைகளில் பாரியளவில் மருந்து தட்டுப்பாடு நிலவுவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் ஊடகங்களிடம் தெரிவித்த கருத்துக்கு பதில் வழங்கும் வகையில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார். 

சுகாதார அமைச்சராக பதவியேற்கும் போது 49-70 வகையான மருந்துகளுக்கு தினமும் தட்டுப்பாடு இருந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார். 

தட்டுப்பாடான மருந்துகளை உடனடியாக வைத்திய விநியோக பிரிவு மற்றும் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தால் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியுள்ளார்.

No comments:

Post a Comment