வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஆறு மாதகால பிணை - News View

About Us

About Us

Breaking

Monday, August 6, 2018

வங்காளதேசம் முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு ஆறு மாதகால பிணை

வங்காளதேசத்தில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற வன்முறைக்கு தூண்டுகோலாக இருந்ததாக கைது செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் கலிதா ஜியாவுக்கு 6 மாதகால பிணை வழங்கப்பட்டுள்ளது. 

வங்காளதேசத்தில் 2015ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக மிகப்பெரிய வன்முறை வெடித்தது. இந்த வன்முறையின் போது அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் பேருந்து மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இந்த விபத்தில் சுமார் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

இதையடுத்து இந்த வன்முறை தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதில் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மீது வன்முறையை தூண்டியதாக வழக்கு தொடரப்பட்டது இதனால் அவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில், குமில்லா சிறப்பு நீதிமன்றத்தில் கலிதா ஜியா சார்பில் பிணை கோரி மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், 6 மாத இடைக்கால பிணை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.

No comments:

Post a Comment