வைத்தியர்கள் இன்மையால் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவு மூடப்படக்கூடிய அபாயத்தில் உள்ளதாக வட மாகாண அரச வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது
யாழ் ஊடக அமையத்தில் இன்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இந்த விடயம் தொடர்பில் தௌிவுபடுத்தப்பட்டது.
தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் பிரிவிற்கு 18 வைத்தியர்கள் தேவைப்படும் நிலையில் தற்போது ஒன்பது வைத்தியர்கள் மாத்திரமே உள்ளதாக ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட வைத்திய கலாநிதி சு.நிஷாந்த குறிப்பிட்டுள்ளார்.
தற்போது சேவைக்கமர்த்தப்பட்டுள்ள வைத்தியர்களிலும் சிலர் இடமாற்றப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த நிலையில் வைத்தியர்களின் பற்றாகுறை தொடர்பில் தௌிவூட்டும் வகையில் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை அடையாள பகிஷ்கரிப்பில் ஈடபடவுள்ளதாகவும் வட மாகாண அரச வைத்தியர் சங்கம் தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment