கொழும்பு - கண்டி பிரதான புகையிரத பாதையில் இரு புகையிரதங்கள் மோதிக்கொண்டன - News View

About Us

About Us

Breaking

Monday, August 6, 2018

கொழும்பு - கண்டி பிரதான புகையிரத பாதையில் இரு புகையிரதங்கள் மோதிக்கொண்டன

மலையக ரயில் மார்க்கத்தில் றம்புக்கனை மற்றும் பொல்கஹவெலவுக்கிடையில் பனலிய பகுதியில் இரண்டு ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாகின. இச்சம்பவம் இன்று (06) பி.ப 4.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அலுவலக ரயில் றம்புக்கனை நோக்கி பயணித்த ரயிலின் எஞ்சினில் ​மோதி விபத்துக்குள்ளாகியதாக ரயில்வே திணைக்கள அதிகாரியொருவர் கூறினார்.

மலையக ரயில் மார்க்கத்தில் றம்புக்கனை மற்றும் பொல்கஹவெலவுக்கிடையில் பனலிய பகுதியில் இரண்டு ரயில்கள் மோதியதில் காயமடைந்தவர்கள் பொல்கஹவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 15க்கும் ​மேற்பட்டவர்கள் பொல்கஹவெல வைத்தியசாலயில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.
பலத்த காயங்களுக்கு இலக்கான சிலர் மேலதிக சிகிச்சைகளுக்காக குருணாகல் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து கண்டி நோக்கி பயணித்த அலுவலக ரயில் சமிக்ஞை இல்லாததால் நிறுத்தப்பட்டிருந்ததாக ரயில்வே திணைக்கள அதிகாரியொருவர் கூறினார்.

இதன்போது கொழும்பு கோட்டையில் இருந்து கிறம்புக்கனை நோக்கி பயணித்த ரயில் எஞ்சின் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலில் மோதியுள்ளது.

விபத்தில் ரயில் பெட்டிகள் சிலவற்றுக்கும் ரயில் பாதைக்கும் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொதுமுகாமையாளர் விஜய சமரசிங்க குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment