மட்டக்களப்பு கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பூலாக்காடு கிராம சேவகர் பகுதியில் உள்ள நூறு ஏக்கர் தவனைக் கண்டம் என அழைக்கப்படும் வயல்வெளி பிரதேசத்தில் இன்று (06) காலை ஆயுதங்கள் சிலவற்றை மீட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது எல்.எம்.ஜீ. ஒன்றும் ரி.56 வகை துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று (05) காணி உரிமையாளரான முத்துவேல் சிவலிங்கம் என்பவர் தமது வயலில் வரம்பு கட்டும் பணிகளை மேற்கொண்ட போது மர்மப் பொருள் ஒன்று தெரிவதனை அறிந்து வாழைச்சேனை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
பொலிஸார் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு, ஆயுதங்கள் புதைத்து வைக்கப்பட்டுள்ளதை அறிந்து அவற்றினை மீட்டுள்ளதாக தெரிவித்தனர். இது தொடர்பான விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment