4.3 கிராம் ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை - News View

About Us

About Us

Breaking

Monday, August 6, 2018

4.3 கிராம் ஹெரோயின் வைத்திருந்த நபருக்கு ஆயுள் தண்டனை

ஹெரோயின் 4.3 கிராமினை தன்வசம் வைத்திருந்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கி தீர்பளித்துள்ளது. 

கிருலப்பனை பகுதியை சேர்ந்த 36 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தை ஒருவருக்கே கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி கிஹான் குலதுங்க இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். 

2012 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 7 ஆம் திகதி பொல்ஹேனகொட இராணுவத்தினருக்கு கிடைத்த தகவலை அடுத்து கிருலப்பனை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் குறிதத்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார். 

நீண்ட விசாரணைகளின் பின்னர் குற்றவாளி மீது சுமத்தப்பட்டிருந்த குற்றம் நிரூபிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

குற்றவாளிக்கு எதிராக 6 திருட்டுச்சம்பங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளதாகவும் 2012 ஆம் 340 கிராம் கஞ்சாவினை வைத்திருந்த சம்பவம் தொடர்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டதாகவும் அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்திருந்தார். 

இவை அனைத்தையும் கருத்திற்கொண்டு குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment