இன்று பிற்பகல் 03.00 மணி முதல் புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, August 8, 2018

இன்று பிற்பகல் 03.00 மணி முதல் புகையிரத சாரதிகள் வேலை நிறுத்தம்

சம்பளப் பிரச்சினையை முன்வைத்து ரயில் சாரதிகள் மற்றும் பாதுகாவலர்களை உள்ளடக்கிய பல தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன. பிற்பகல் 3 மணியளவில் இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டது.

தமது கோரிக்கைகள் தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டு, பின்னர் இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மிகுந்த வருத்தமடைந்துள்ளதாகவும் இலங்கை ரயில் பாதுகாவலர்கள் சங்கத்தின் பிரதம செயலாளர் சீ.எம்.பீ. பீரிஸ் தெரிவித்தார்.

3 மணிக்கு பின்னர் கோட்டை மற்றும் மருதானை ரயில் நிலையங்களில் இருந்து பயணத்தை ஆரம்பிக்கும் ரயில்களின் பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment