உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவானவர்களுக்கு விஷேட செயலமர்வு - News View

About Us

About Us

Breaking

Monday, July 2, 2018

உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவானவர்களுக்கு விஷேட செயலமர்வு

உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவான திருகோணமலை மாவட்டத்தைச் சேர்ந்த தலைவர் உபதலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான விஷேட செயலமர்வும் ஒரு நாள் பயிற்சி பட்டறையும் நேற்று (02) திருகோணமலை முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

கிழக்கு மாகாண ஆளணி மற்றும் பயிற்சிக்கான பிரதிப்பிரதம செயலாளர் ஜே.ஜே.முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

திருகோணமலை மாவட்டத்திலுள்ள திருகோணமலை நகர சபை, கிண்ணியா நகர சபை, குச்சவௌி பிரதேச சபை மற்றும் மூதூர் பிரதேச சபைகளைச் சேர்ந்த தமிழ் மொழி மூலமாக 72 பேர் இப்பயிற்சியில் கலந்து கொண்டதுடன் சபை நடவடிக்கைகள், உள்ளுராட்சி சட்டம் மற்றும் மக்கள் சேவைகள் தொடர்பாகவும் தௌிவு படுத்தப்பட்டது.

கிழக்கு மாகாணத்தைச்சேர்ந்த மட்டக்களப்பு அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச்சேர்ந்த 879 பேர்களிலும் 275 பேர்களுக்கு சிங்கள மொழி மூலமாகவும் 603 பேர்களுக்கு தமிழ் மொழி மூலமாகவும் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதாகவும் கிழக்கு மாகாண ஆளணி மற்றும் பயிற்சிக்கு பொறுப்பான பிரதிப்பிரதம செயலாளர் ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்.
அத்துடன் இன்றைய தினம் 03ம் திகதி மொறவெவ கன்தளாய் வெறுகல் திருகோணமலை பட்டனமும் சூழலும் பிரதேச சபை மற்றும் தம்பலகாமம் போன்ற பிரதேச சபைகளின் உறுப்பினர்களுக்காக தமிழ் மொழி மூலமான நடாத்தப்படவுள்ளதாகவும் எதிர்வரும் 08ம் மாதம் 05ம் திகதி, 22ம் திகதிகளில் அம்பாறை மாவட்டத்தில் சிங்கள மொழி மூலமாக பயிற்சிகள் இடம் பெறவுள்ளதாகவும் மேலும் அவர் குறிப்பிட்டார்.

நேற்றைய நிகழ்வில் திருகோணமலை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் எஸ்.சுதாகரன் முகாமைத்துவ அபிவிருத்தி பயிற்சி பிரிவின் பணிப்பாளர் எம்.எம்.ஹாலிதா மற்றும் வளவாளர் கே.குணநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்துல் சலாம் யாசீம்

No comments:

Post a Comment