முல்லைத்தீவு – ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் நிரந்தர வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாது தற்காலிக வீடுகளில் நீண்ட காலமாக வசித்து வரும் குடும்பங்கள், பெரும் கஷ்டங்களை எதிர்கொண்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட மாங்குளம், பனிக்கன்குளம், திருமுறிகண்டி உள்ளிட்ட பகுதிகளில் 100 இக்கும் மேற்பட்ட குடும்பங்கள் இதுவரையில் நிரந்தர வீடுகள் வழங்கப்படாத நிலையில் தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்றன.
இது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருகின்ற நிலையில் அன்றாடம் பெரும் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.
குறிப்பாக, வீட்டுத்திட்ட பயனாளிகள் தெரிவின் போது மேற்கொள்ளப்படும் புள்ளியிடல் முறைகளில் தனி அங்கத்தவர்களை கொண்ட குடும்பங்கள் மற்றும் புள்ளியிடல் முறையில் தெரிவு செய்யப்படாத குடும்பங்கள் கடந்த 9 ஆண்டுகளாக இவ்வாறான தற்காலிக வீடுகளில் வாழ்கின்றன.
எனவே வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படாது தற்காலிக வீடுகளில் வாழ்ந்து வருவோருக்கான வீட்டுத்திட்டங்களைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
No comments:
Post a Comment