இன்று முதல் (1) ரயில்கள், மற்றும் ரயில் நிலையங்களில் சட்டவிரோதமாக பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன் யாசகம் கேட்பதற்கும் இன்று முதல் முற்றுமுழுதாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான சோதனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ரயில் பாதுகாப்பு அதிகாரிகளை ஈடுபடுத்தியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக புகையிரத திணைக்கள பொது முகாமையாளர் எஸ்.எம்.அபேவிக்ரம தெரிவிக்கையில் புகையிரத பயணிகள் எதிர்நோக்கும் பல்வேறு இம்சைகள் மற்றும் பிரச்சனைகைள கருத்திற் கொண்டே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது என்றார்.
இந்த தீர்மானத்திற்கு அமைய அடுத்த வரும் ஒரு வார காலத்திற்குள் புகையிரதங்களில் இருந்து பிச்சைக்காரர்களும் யாசகம் கேட்போரும் அகற்றப்படுவர்.
இவர்கள் தொடர்ந்தும் புகையிரதங்களில் பயணிகளுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தினால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திரு.அபேவிக்ரம மேலும் கூறினார்.
No comments:
Post a Comment