நைஜீரிய முன்னாள் அதிபர் பதுக்கிய ரூ.2 ஆயிரம் கோடி கறுப்பு பணம் நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிப்பு - News View

About Us

About Us

Breaking

Sunday, July 1, 2018

நைஜீரிய முன்னாள் அதிபர் பதுக்கிய ரூ.2 ஆயிரம் கோடி கறுப்பு பணம் நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிப்பு

நைஜீரியா முன்னாள் அதிபர் அபசா சுவிஸ் வங்கியில் பதுக்கிய ரூ.2 ஆயிரம் கோடி கறுப்பு பணத்தை நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு செய்துள்ளது.

நைஜீரியாவில் கடந்த 1993 முதல் 1998-ம் ஆண்டு வரை அபசா அதிபராக இருந்தார். அவர் தனது பதவி காலத்தில் பல ஆயிரம் கோடி கறுப்பு பணத்தை பதுக்கினார்.

அவற்றை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கியில் வைப்புச் செய்தார். இந்த நிலையில் கடந்த 1998-ம் ஆண்டில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார்.

இந்த விவகாரம் நைஜீரியாவில் பெரும் சர்ச்சையாக இருந்தது. இந்த நிலையில் கடந்த 2015-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட முகம்மது புகாரி சுவிட்சர்லாந்தில் பதுக்கப்பட்டுள்ள கறுப்பு பணத்தை மீட்டு நாட்டு மக்களுக்கு பகிர்ந்தளிப்பேன் என வாக்குறுதி அளித்தார்.

அதன்படி தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகி விட்டார். அதை தொடர்ந்து கறுப்பு பணத்தை மீட்பது குறித்து சுவிட்சர்லாந்து நாட்டின் வங்கி அதிகாரிகளுடன் நைஜீரிய அரசு பேச்சு நடத்தியது.

அதனை தொடர்ந்து உலக வங்கி மேற்பார்வையில் முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி நைஜீரிய அரசிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. அதை நஜீரியாவில் வசிக்கும் 3 லட்சம் குடும்பங்களுக்கு சமமாக பிரித்து வழங்க அரசு முடிவு செய்தள்ளது.

No comments:

Post a Comment