காத்தான்குடி ஒஸா நிறுவனத்தினது நலிவுற்ற மக்களுக்கான வருடாந்த ரமழான் உலர் உணவு வழங்கும் நிகழ்வு கடந்த 2018.06.03ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பி.ப 4.00 மணியளவில் காத்தான்குடி கடற்கரை ஜூமைரா பெலஸ் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபை உறுப்பினரும், ஒஷா நிறுவனத்தின் தலைவருமான இல்மி அஹமட் லெவ்வை BA அவர்கள் தலைமையில் தெரிவு செய்யப்பட்ட 400 தேவையுடையோருக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக பொறியியலாளர் எம்.எம். அப்துர் ரஹ்மான் (தவிசாளர் NFGG) அவர்களும், காத்தான்குடி தள வைத்தியசாலையின் வைத்திய அத்தியச்சகர் எம்.எஸ்.எம். ஜாபிர் அவர்களும், மின் அத்தியச்சகர் பொறியியலாளர் நௌபல், காத்தான்குடி நகர சபை உறுப்பினர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமி மற்றும் முன்னாள் கல்விப்பணிப்பாளர் எம்.எச்.ஏ.எம். இஸ்மாயில் MA, மௌலவி எம்.சீ.எம். றிஸ்வான் (மதனி) காத்தான்குடி மத்தியஸ்தர் சபை தலைவர் எம்.ஐ.எம். உஸனார் மற்றும் பள்ளிவாயல்களின் பேஸ் இமாம்கள், உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் என்று பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிறுவனம் நலிவுற்ற மக்களுக்கான பல்வேறுபட்ட மிகவும் பெறுமதி வாய்ந்த நிகழ்வுகளை தொடர்ச்சியாக கடந்த எட்டு வருடங்களாக நடாத்தி வருவது குறிப்பிடத்தக்கதொரு விடயமாகும்.
No comments:
Post a Comment