தேசிய விபத்து நிவாரண வாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பம் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 30, 2018

தேசிய விபத்து நிவாரண வாரம் நாளை திங்கட்கிழமை ஆரம்பம்

தேசிய விபத்து நிவாரண வாரம் நாளை திங்கட்கிழமை (02) ஆரம்பமாகவுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்றா நோய்ப்பிரிவு இதனை பிரகடனப்படுத்தியுள்ளது. தேசிய விபத்து நிவாரண வாரத்தில் சுகாகார அமைச்சு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளது.

அனர்த்தங்களை தவிர்ப்பதற்கு பங்களிப்பு செய்யும் ஏனைய நிறுவனங்களின் ஒத்துழைப்பு இதற்காக பெற்றுக்கொள்ளப்படும் என்று இந்தப் பிரிவின் விசேட வைத்தியர் டொக்டர் சமித்த சிறிதுங்க தெரிவித்தார். நாளாந்தம் 24 பேர் விபத்துக்களினால் உயிரிழப்பதாக அவர் குறிப்பிட்டார்.

விபத்துக்களின் காரணமாக வருடாந்தம் சுமார் பத்தாயிரம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் மூவாயிரம் விபத்துக்கள் வாகன விபத்துக்களால் இடம்பெறுகின்றன. விபத்துக்கு உள்ளாவோரில் பெரும்பாலானோர் 15 முதல் 45 வயதிற்குட்பட்டவர்கள் என்று டொக்டர் சிறிதுங்க சுட்டிக்காட்டினார்.

அத்துடன், தேசிய விபத்து நிவாரண வாரத்தை முன்னிட்டு வாகன போக்குவரத்து பொலிஸ் பிரிவு பல நிகழ்ச்சிகளை முன்னெடுக்க உள்ளது.

முச்சக்கரவண்டி, பஸ் மற்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்களின் சாரதிகளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளன.

வீதி ஒழுங்கு விதிகளை மீறுவோரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இந்த வாரத்தில் விசேட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக கொழும்பு வாகன போக்குவரத்து பொலிஸ் பிரிவின் வீதி விபத்து மற்றும் வாகனம் தொடர்பான பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க அப்புகொட தெரிவித்தார்.

No comments:

Post a Comment