விளையாட்டு துறையின் முன்னேற்றத்திற்கு அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் - ஜனாதிபதி - News View

About Us

About Us

Breaking

Saturday, June 30, 2018

விளையாட்டு துறையின் முன்னேற்றத்திற்கு அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் - ஜனாதிபதி

விளையாட்டு துறையின் முன்னேற்றத்திற்கு அனைத்து உதவிகளையும் அரசாங்கம் வழங்கும் என்று ஜனாதிபதி மைத்ரிபால சிரிசேன தெரிவித்தார்.

2018 ஜூன் மாதம் ஜப்பானின் ஜிபு நகரத்தில் நடைபெற்ற 2018ஆம் ஆண்டின் கனிஷ்ட ஆசிய விளையாட்டு விழாவில் பதக்கம் வென்ற இலங்கை வீர, வீராங்கனைகள் நேற்று (29) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியை சந்தித்தனர்.

இந்த விளையாட்டு விழாவில் 03 தங்கப் பதக்கங்களையும் 04 வெள்ளிப் பதக்கங்களையும் 02 வெண்கலப் பதக்கங்களையும் இலங்கை விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் பெற்றுக்கொண்டனர். இவர்களது திறமைகளை பாராட்டிய ஜனாதிபதி , அவர்களது எதிர்கால முன்னேற்றத்திற்காக ஜனாதிபதி தனது நல்லாசிகளை தெரிவித்தார்.

விளையாட்டு துறையிலுள்ளவர்களை வலுவூட்டி அவர்களின் எதிர்கால பயணத்திற்கும் விளையாட்டு துறையின் முன்னேற்றத்திற்கும் அரசாங்கம் அனைத்து வசதிகளையும் வழங்கும் என்றும் ஜனாதிபதி இதன் போது தெரிவித்தார்.

இந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளின் போசாக்கு நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் ஏனைய வசதிகளை வழங்குவதற்கும் அனுசரனையை வழங்குவதற்கு பல்வேறு தனியார் துறை நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அவர்களுக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார்.
விளையாட்டு துறைக்கு அனுசரணை வழங்கும் நிறுவனங்களின் அந்த அனுசரணைக்கேற்ப வரி நிவாரணங்களை வழங்குமாறு முன்வைக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பில் கவனம் செலுத்திய ஜனாதிபதி, அமைச்சரவையுடன் கலந்துரையாடி அந்த முன்மொழிவை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

எதிர்வரக்கூடிய 2020ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டி மற்றும் 2024ஆம் ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இலங்கைக்கு பதக்கங்களை வெற்றிகொள்வதே முக்கிய நோக்கமாகும். இந்த வீர, வீராங்கனைகளை பாராட்டுவதன் மூலம் மெய்வல்லுனர் போட்டிகளில் ஈடுபடுகின்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்றும் மெய்வல்லுனர் போட்டிகளுக்கு நாட்டில் புதியதோர் எழுச்சியை ஏற்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

2018ஆம் ஆண்டு கனிஷ்ட ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்ற அக்குரம்பொட வீரகெப்பெடிபொல மத்திய மகா வித்தியாலயத்தின் எஸ்.அருண தர்ஷன, குருணாகலை மலியதேவ கல்லூரியின் பீ.எம்.பீ.எல்.கொடிகார, கொழும்பு புனித பெனடிக் கல்லூரியின் கே.பி.பீ.ஆர்.ரவிஷ்க இந்திரஜித், கொழும்பு நாலந்தா கல்லூரியின் ஜீ.டி.கே.கே. பபசர, குளியாப்பிட்டிய மத்திய கல்லூரியின் பாரமி வசந்தி மாரிஸ்டெலா, வளல ஏ. ரத்நாயக்க மத்திய மகா வித்தியாலயத்தின் கே.ஜி.தில்ஷி குமாரசிங்க, கண்டி சுவர்ணமாலி மகளிர் கல்லூரியின் அமாஷா டி சில்வா, வத்தளை லயிஷியம் சர்வதேச பாடசாலையின் சசினி தாரக்கா திவ்வியாஞ்சலி, நுகேகொட லயிஷியம் சர்வதேச பாடசாலையின் ருமேஷா இசாரா அத்திடிய ஆகியோர் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்.

அமைச்சர் பைசர் முஸ்தபா மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் அதிகாரிகள், பதக்கங்களை வென்ற விளையாட்டு வீர, வீராங்கனைகளின் பெற்றோர், பாடசாலை அதிபர்கள், பயிற்றுவிப்பாளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment