மாளிகாவத்தை மையவாடி காணியையும், அதனுடன் தொடர்புபட்ட தொன் உபாலி ஜயசிங்கவின் காணியையும் நில அளவீடு செய்யும்படி கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இரு தரப்பினருக்கும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
மாளிகாவத்தை மையவாடிக்கு சொந்தமான காணியை சட்டவிரோதமாக அபகரித்து உபாலி ஜயசிங்க மாடி கட்டிடமொன்றினை நிர்மாணித்து வருவதாகவும் அதற்கு தடையுத்தரவு பிறப்பிக்கும்படியும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மத உரிமைகளுக்கான அமைப்பு (SLMRRO) கொழும்பு மாவட்ட நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
நீண்ட காலமாக விசாரணையின் கீழுள்ள இந்த வழக்கு தொடர்பிலே நீதிமன்றம் காணியை அளவீடு செய்யுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதென ஸ்ரீலங்கா முஸ்லிம் மத உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் அஸ்லம் ஒத்மான் தெரிவித்தார்.
மாளிகாவத்தை மையவாடி காணி நில அளவையாளர் ஏ.எஸ்.அமீரினால் அளவீடு செய்யப்பட்டதாகும். மாளிகாவத்தை மையவாடி காணிக்கு நீதி பெற்றுக்கொள்வதில் கொழும்பு பெரிய பள்ளிவாசல் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. காணியை அளவீடு செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளமை எமக்குக் கிடைத்துள்ள ஆரம்ப வெற்றியாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment