பிரபல திரைப்பட நடிகர் ரோய் டி சில்வா காலமானார் - News View

About Us

About Us

Breaking

Saturday, June 30, 2018

பிரபல திரைப்பட நடிகர் ரோய் டி சில்வா காலமானார்

பிரபல திரைப்பட இயக்குநரும் நடிகருமான ரோய் டி சில்வா தனது 80ஆவது வயதில் இன்று இயற்கை எய்தினார். ரோய் டி சில்வா மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

1937ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கொழும்பில் பிறந்த ரோய் டி சில்வா, நடிகர் மற்றும் திரைப்பட இயக்குநராக சினிமாத் துறையில் பாரியளவில் பணியாற்றியுள்ளார்.

´சுஜாதாகே ரஹச´ திரைப்படத்தின் மூலம் திரைப்பட துறைக்குள் நுழைந்த அவர் 1977 ஆம் ஆண்டு அவரது இயக்கத்தில் முதல் திரைப்படத்தை வெளியிட்டுள்ளார். 

அவருடைய நடிப்பில் கடைசியாக 2015 ஆம் ஆண்டு ´மை நோம் ஈஸ் பந்து´ திரைப்படம் வெளிவந்தது. பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் பாடகராகவும் இருந்துள்ளார். 

No comments:

Post a Comment