பிரதமர் வெளியிட்டுள்ள மே தினச்செய்தி - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 1, 2018

பிரதமர் வெளியிட்டுள்ள மே தினச்செய்தி

தமது உரிமைகளை வெற்றி கொள்வதுடன் நாட்டிற்காக தமது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு எந்தவிதமான குறைபாடுமின்றி அர்ப்பணிப்புடன்செயற்படுவதற்கு அனைத்து உழைக்கும் மக்களுக்கும் பலம் மற்றும் துணிச்சல் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

பிரதமர் ரணில்விக்கிரமசிங்க மே தினத்தை முன்னிட்டு வெளியட்டுள்ள செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள மே தினச்செய்தி பின்வருமாறு:

மே தினச் செய்தி
நவீன தொடர்பாடல், தொழிநுட்ப முன்னேற்றத்துடன் ஊழியத்திற்கான பெறுமதி மற்றும் அதன் பயன்பாடு மிகவும் விரிவடைந்துள்ளது. உழைக்கும் மக்கள் என்போர் இனிமேலும் தொழிற்சாலையில், பண்ணையில் மாத்திரம் வேலை செய்வோர் அல்ல. உருவாகியுள்ள பரந்த தொழில்ரீதியான சூழலில் வேலை செய்யும் மக்கள் தமது உரிமைகள் தொடர்பாக உணர்வுபூர்வமாக நோக்குதல், கலந்துரையாடுதல் போன்றே நாட்டிற்கும் மக்களுக்கும் தன்னால் நிறைவேற்றப்பட வேண்டிய பொறுப்புக்கள் தொடர்பாகவும் உரிய கவனத்தைச் செலுத்துவது மிகவும் முக்கியமானதாகும்.

உலக வரலாற்றில் தொழிலாளர் போராட்டங்கள் உழைக்கும் மக்களுக்குப் பல உரிமைகளைப் பெற்றுக் கொடுத்துள்ளதுடன், தற்காலத்தில் தமது உரிமைகளைப் பெற்றுக் கொள்வதற்காக சம்பிரதாய போராட்டங்களைத் தாண்டிச் சென்ற புதிய முறைமைகளைக் கண்டறியும் சவால் நம் அனைவரின் முன்பாகவும் காணப்படுகிறது. நவீன தொடர்பாடல், தொழிநுட்பட முன்னேற்றத்துடன் உழைக்கும் மக்கள் ஒன்று சேர்வதற்கு, தமது உரிமைகள் தொடர்பாகப் பேசுவதற்கு, அது சார்ந்து நிற்பதற்கு மிகவும் செயல்திறமுடைய திறந்த உரையாடல் அரங்குகள் காணப்படுகின்றன.

புதிய நோக்குடன் மிகவும் விரிவான உரையாடல், கலந்துரையாடல், செயல்திறமுடைய தலையீடு என்பவற்றுடன் தொழிலாளர் தினத்திற்குப் புதிய அர்த்தமொன்றை வழங்க நாம் அனைவரும் அணிதிரள வேண்டும். முன்னேற்றமடைந்;த உலகுடன் கை கோர்த்து உண்மையான மறுமலர்ச்சியை நோக்கி எமது நாட்டை உயர்த்துவதற்கு உழைக்கும் மக்களின் உயர்ந்தபட்ச பங்களிப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறேன்.

தமது உரிமைகளை வெற்றி கொள்வதுடன் நாட்டிற்காக தமது கடமைகள் மற்றும் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு எந்தவிதமான குறைபாடுமின்றி அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்கு அனைத்து உழைக்கும் மக்களுக்கும் பலம் மற்றும் துணிச்சல் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன்.

ரணில் விக்கிரமசிங்க 
பிரதம அமைச்சர்
2018. 04. 27

No comments:

Post a Comment