காணாமல் போன பெண் உறைந்த பனிக்கட்டிக்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சோகம் - News View

About Us

About Us

Breaking

Tuesday, May 1, 2018

காணாமல் போன பெண் உறைந்த பனிக்கட்டிக்குள் பிணமாக கண்டெடுக்கப்பட்ட சோகம்

ஆறு மாதங்களுக்குமுன் காணாமல் போன பெண் ஒருவர். சமீபத்தில் மின்னசோட்டா பகுதியிலுள்ள ஒரு உறைந்த நிலையில் உள்ள குளத்திலிருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குளத்து நீரில் ஆறு அடி ஆழத்தில் உறைந்த தண்ணீருக்குள் ஒரு பெண்ணின் சடலம் கிடப்பதைப் பார்த்து பொலிசாருக்குக்கு ஒருவர் தகவல் கொடுத்துள்ளார். பொலிசார் 500 பவுண்டு எடையுள்ள ஐஸ் கட்டியுடன் அவரது உடலை வெட்டி எடுத்தனர்.

ஆதாரங்கள் எதுவும் கலைந்து விடக்கூடாது என்பதற்காக ஐஸ் தானாக கரையும் வரை பொலிசாரும் தடயவியல் நிபுணர்களும் காத்திருந்தனர்.

மூன்று குழந்தைகளுக்கு தாயான அமெரிக்காவின் Burnsville பகுதியைச் சேர்ந்தவர் எலிசபெத் (41), இவரது மரணத்திற்கான காரணம் எதையும் பொலிசார் தெரிவிக்காத நிலையில் அது மிகவும் சந்தேகத்திற்குரிய மரணம் என்று மட்டும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது வீட்டில் சோதனை மேற்கொண்ட பொலிசார், அங்கிருந்த கார்ப்பெட் ஒன்றில் இரத்தக்கறை உள்ளதை கண்டு பிடித்துள்ளனர். தனது ஆண் நண்பருடன் வாழ்ந்து வந்த எலிசபெத் உடல் நலக் குறைவு காரணமாக இரண்டு பெண்களுடன் சிகிச்சைக்காக கடந்த நவம்பர் மாதம் சென்றபோதுதான் அவரைக் கடைசியாக பார்த்ததாக அவரது ஆண் நண்பர் தெரிவித்துள்ளார்.

அவர் மது பானப் பழக்கத்தால் உண்டான பிரச்சினைகளால் அவதியுற்று வந்ததாக அவரது நண்பர்களும் குடும்பத்தினரும் தெரிவித்துள்ளனர். ஆனால் எலிசபெத்தின் ஆண் நண்பர் மாற்றி மாற்றி பேசி வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில் எலிசபெத்தின் உடல் வெகு நீண்ட காலமாக ஐஸில் இருந்துள்ளது எனவும், எனவே அவர் நவம்பர் அல்லது டிசம்பர் மாதமே இறந்திருக்கலாம் என்றும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment