சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாக சபையின் செயலாளர் தவிர்ந்த அனைவருக்கு நன்றிகள்! - News View

About Us

About Us

Breaking

Sunday, May 6, 2018

சாய்ந்தமருது பள்ளிவாசல் நிர்வாக சபையின் செயலாளர் தவிர்ந்த அனைவருக்கு நன்றிகள்!

சாய்ந்தமருது பள்ளிவாசல் ஜனாஸா வாகனப் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்பட்டுள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய ஆவணங்களை சம்பந்தப்பட்ட தரப்பிடம் ஒப்படைத்து ஒரு வாரத்துக்குள் குறித்த ஜனாஸா வாகனத்துக்கான அனைத்து உத்தியோகபூர்வ ஆவணங்களையும் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த விடயம் தொடர்பில் என்னால் முன்னெடுக்கப்பட்ட சிறிய முயற்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.

இருப்பினும், இந்த விடயம் தொடர்பில் எனக்கு எவ்வித ஒத்துழைப்பையும் வழங்காமலும் எனது தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிக்காமலும் சிலவேளைகளில் எனது தொலைபேசி அழைப்புகளுக்குப் பொறுப்புடன் பதில் கூறாமல் தட்டிக் கழித்தும் மேலும் சில எனது தொலைபேசி அழைப்புகளுக்கு மற்றவர்களைக் கொண்டு பதில் கூறச் சொன்னவருமான (தான் இல்லை என்று கூறுமாறு) சாய்ந்தமருது பள்ளிசவாசல் நிர்வாக சபையின் செயலாளரின் நடவடிக்கைகள் தொடர்பில் மிக அதிருப்தியுற்றுள்ளேன்.

பள்ளிவாசல் ஒன்றின் செயலாளர் என்பவர் வெளிப்படையாகவும் பொறுப்புடனும் உண்மைத் தன்மையுடனும் செயற்பட வேண்டும். பிரச்சினைகளைக் கண்டு ஒளிந்து மறையும் தனம் இருக்கக் கூடாது என்பதனை இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறேன். இந்த விடயம் எனது வீட்டுப் பிரச்சினை அல்ல. நமது ஊர் விடயம். நமது பள்ளிவாசல் விடயம் என்பதனை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

எனது இந்தச் சிறிய முயற்சிக்கு மனம் திறந்து முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய ஏனைய அனைவருக்கும் மீண்டும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

ஏ.எச்.சித்தீக் காரியப்பர்

No comments:

Post a Comment