இலவச கண்வில்லையை வழங்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் நாட்டில் வருடந்தோறும் கண்பார்வையற்றோரின் எண்ணிக்கை 12 இலட்சமாக இருந்ததாக சுகாதாரம் போஷாக்கு மற்றும் சுதேச மருத்துவ அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
சுகாதார பணியாளர் சபையின் ஆகக்கூடிய சேவையின் மூலம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் கண்வில்லை சத்திர சகிச்சை நோயாளர்களின் எண்ணிக்கை போதுமானதாக இல்லை என்று அமைச்சர் தெரிவித்தார்.
இதனால், அலுவலக நேரத்திற்குப் பின்னர், விசேட சேவையை பெற்றுக் கொள்வதற்கு வைத்தியர்களுடன் கலந்துரையாடப்பட்டிருப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
2017 ஆம் ஆண்டில் மாத்திரம் 10 ஆயிரத்து 661 கண்வில்லைகள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளன. இதற்காக 86 மில்லியன் ரூபா நிதி செலவிடப்பட்டுள்ளது.
'சுபாரதி' நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரத்ன இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கலந்து கொண்ட கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லயனல் முஹந்திரம் கருத்து வெளியிடுகையில்,
கண் வைத்தியசாலைக்காக 12 மாடிகளைக் கொண்ட புதிய கட்டிடம் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இதற்காக, 3300 மில்லியன் ரூபா நிதியை அரசாங்கம் ஒதுக்கீடு செய்துள்ளது. நாளாந்தம் சுமார் 2 ஆயிரம் நோயாளர்கள் கண் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக வருகை தருகின்றனர்.
தேசிய வைத்தியசாலைக்கு மேலதிகமாக ஏனைய வைத்தியசாலைகளின் கண் சத்திர சிகிச்சையை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் கொழும்பு தேசிய கண் வைத்தியசாலைப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் லயனல் முஹந்திரம் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment