ஒரு இனம் எப்போது தனக்குக் கீழுள்ள இனத்தை அடக்கியாள நினைக்கின்றதோ அப்போதே அவ்வினம் அழிந்துவிட்டதாகவே அர்த்தப்படுகின்றது. - News View

About Us

About Us

Breaking

Monday, April 30, 2018

ஒரு இனம் எப்போது தனக்குக் கீழுள்ள இனத்தை அடக்கியாள நினைக்கின்றதோ அப்போதே அவ்வினம் அழிந்துவிட்டதாகவே அர்த்தப்படுகின்றது.

திரு/ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் தேசியக் கல்லூரியில் இடம்பெற்ற முஸ்லிம் (ஹபாயா) விரோத விவகாரம் இன்று முகநூலில் முக்கிய பேசுபொருளாக உருவெடுத்துள்ளது. பொதுவாகவே இஸ்லாத்திற்கும் இணை வைப்பிற்கும் இடையிலான முறுகலும் மோதலும் இறுதிநாள் வரைக்கும் இருந்துகொண்டேதான் இருக்கும்.

இணை வைப்புக்கள் அனைத்துமே அடிப்படையில் ஒரே இனம்தான். அவை மொழியால், நிலத்தால், நிறத்தால், கலாச்சாரத்தால் வேறுபட்டிருந்தாலும் இஸ்லாத்தை எதிர்கின்ற விடயத்தில் அவ்விணை வைப்புக்கள் அனைத்துமே ஒன்றுக்கொன்று உதவியாகவும் ஒத்தாசையாகவுமே காணப்படும். இதுதான் இஸ்லாம் கூறுகின்ற யதார்த்தம். அந்த யதார்த்தத்தைத்தான் இன்று நாம் பல்வேறு வடிவங்களிலும் கண்டு வருகின்றோம்.

அந்த அடிப்படையில் சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்றுள்ள இந்த ஹபாயா விவகாரம் தொடர்பில் அதுபற்றி குறித்த தரப்பார் வெளிப்படுத்திய ஊடக செவ்விகளையும் சுலோக வாக்கியங்களையும் எடுத்து நோக்கும்போது அது ஹபாயா என்றொரு ஆடைக்கு எதிரான வாதமாகவோ எதிர்ப்பாகவோ தெரியவில்லை. மாறாக சனத்தொகையில் தனக்கு அடுத்ததாக வாழ்கின்ற ஒரு சமூகத்தின் மீதான விரோதத்தையும் குரோதத்தையும் கொப்பளிப்பதற்காக கையில் ஏந்திய ஒரு ஆயுதமாகவே இந்த ஹபாயா விடயத்தை பார்க்கவேண்டியுள்ளது.

ஒரு பாடசாலையில் கற்கின்ற மாணவர்களும் சரி, கற்பிக்கின்ற ஆசிரியர்களும் சரி, தங்களுடைய சமயம் சார்ந்த கலாச்சார ஆடைகளை அணிந்துகொண்டு பணிசெய்வதற்கு இதுவரைக்கும் எந்தவொரு சுற்று நிரூபங்களிலும் தடைகள் விதிக்கப்பட்ட வரலாறுகளோ பதிவுகளோ இல்லை. சண்முகா இந்து மகளிர் கல்லூரி என்பது ஒரு மதம் சார்ந்த பாடசாலையாக இருக்கலாம். அதற்காக அங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்களையும் அந்த மதம் சார்ந்த கலாச்சாரத்திற்குள் வலிந்திழுத்துத் திணிப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

ஒரு மனிதனுடைய உணவுத்தட்டில் இருக்க வேண்டிய உணவு, அணிய வேண்டிய ஆடைகள், பின்பற்ற வேண்டிய கலாச்சாரங்கள் போன்றவற்றை சக மனிதர்கள் தீர்மானிக்கின்ற கேவலமும் அசிங்கமும் இந்த நாட்டில்தான் இந்தளவு தூரம் ஆழமாக வேரூன்றி, அகலமாக விழுதெறிந்து, கிளைகள் பரப்பித் தலைவிரித்தாடுகின்றது என்பதை உணரும்போது வெட்கமும் வேதனையும்தான் எஞ்சி நிற்கின்றன.

இந்து சமயப் பாடசாலையில் கற்பிக்கின்ற ஆசிரியைகள் இந்துக்கலாச்சார ஆடைகளையே அணியவேண்டும் என்று வற்புறுத்துவது போன்று முஸ்லிம் பிரதேசங்களிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளில் கற்பிக்கின்ற முஸ்லிம் அல்லாத ஆசிரியைகளும் இஸ்லாமிய ஆடைகளை அணியவேண்டும் என்று நாங்கள் வற்புறுத்தினால் இந்த நாட்டினுடைய எதிர்கால சந்ததியின் கல்விரீதியான நிலையென்ன?

இந்துக்கலாச்சாரம், இந்துக்கலாச்சாரம் என்று மூச்சுக்கு முன்னூறு தடவை கூறிக்கொள்கின்ற இந்தக் கலாச்சாரக் காவலர்கள் அதற்காக முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்திலாவது இந்துக்களின் கலாச்சார ஆடையான வேட்டி, சட்டையுடன் பங்கேற்றிருக்கலாமல்லவா? ஆனால் அவர்களோ மேலைநாட்டு கலாச்சார ஆடையாகிய முழு நீளக் காற்சட்டையுடன்தானே காட்சியளித்தார்கள். என்னே இவர்களுடைய கலாச்சார ஈடுபாடு?

அதேபோன்று 'இந்துக்கல்லூரி இந்துக்களுக்கே சொந்தம்' என்பது போன்று 'இந்த பௌத்த நாடும் பௌத்தர்களுக்கே சொந்தம்' என்று அடுத்தவர்கள் கூறிவிட்டால் இந்த இந்துக்கல்லூரியை எங்கே கொண்டு சென்று கலாச்சாரத்தை கட்டி எழுப்புவது? அது முடியாமல் போனதால்தானே முப்பத்தியைந்து வருடங்கள் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்திற்கும் முள்ளிவாய்க்காலில் வைத்து முடிவுரை எழுதப்பட்டது.

எனவே இந்த நாடு பல்லினங்கள் வாழ்கின்ற ஒரு ஜனநாயக நாடு. இந்நாட்டில் யாருக்கும் அவரவர் விரும்புகின்ற கலாச்சாரத்தை கடைப்பிடிப்பதற்கு பூரணமான உரிமையுள்ளது. அதில் அடுத்தவர்கள் தலையிட்டு அந்த உரிமைகளை கையில் எடுப்பதென்பது நாகரிக வாசனையற்ற கற்கால மனிதர்களுடைய பண்பாடாகும். அதிலும் குறிப்பாக வினைத்திறன் மிக்கதொரு எதிர்கால சந்ததியை உருவாக்கும் அரும்பணியிலுள்ள ஆசிரியர் சமூகம் பாடசாலைகளில் இருந்தே இவ்வாறான கீழ்த்தரமான முன்னுதாரணங்களை ஏற்படுத்துவது நிச்சயமாகவே அந்த ஆசிரியர்கள் சார்ந்த சமூகத்தின் எதிர்காலத்தையே இருட்டறையாக்கிவிடும் என்பதில் ஐயமில்லை.

இது இவ்வாறிருக்க, இஸ்லாத்தின் விரோதிகள் இஸ்லாத்தை எதிர்ப்பதிலும் அவர்களுடைய அடையாளங்களையும் கலாச்சாரங்களையும் பாதுகாப்பதிலும் மிகவும் குறியாகவும் வெறியாகவுமே இருந்து வருகின்றனர். அதற்காக பல எல்லைகளையும் தாண்டுகின்ற நிலைக்கும் அவர்கள் செல்கின்றனர். ஆனால் நமது சோனக சமூகமோ இஸ்லாத்தின் அடையாளங்களை கரைத்து, மத நல்லிணக்கம் என்னும் போர்வைக்குள் இஸ்லாத்தை குழிதோண்டிப் புதைத்துவிட்டு அந்த இணை வைப்பாளர்களிடமே கண்ணியத்தையும் கௌரவத்தையும் எதிர்பார்க்கின்ற கேவலமான நிலையில் காணப்படுகின்றது.

கடந்த தமிழ், சிங்களப் புத்தாண்டில் கலந்து சிறப்பித்த நமது பெயர்தாங்கிகளால், பள்ளிவாசலுக்குள் பிரித் ஓதிய பண்டித சிகாமணிகளால் மத நல்லிணக்கம் என்று இன்னும் பல மாற்றுமதக் கலாச்சாரங்களை உயிர்ப்பித்த முஸ்லிம் பெயர்தாங்கிய எந்தவொரு உதவாக்கரைகளாலும் இன்று இந்த இஸ்லாமிய சமூகத்திற்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையை சீர்செய்ய முடியாது என்பதே யதார்த்தமான உண்மையாகும்.

தாஹிரா நஸீர்
திருகோணமலை
26/04/2018

No comments:

Post a Comment