கம்பஹா மாவட்டத்தில் சட்டவிரோத உர தொகுதிகள் கைப்பற்றல் - News View

About Us

About Us

Breaking

Monday, April 30, 2018

கம்பஹா மாவட்டத்தில் சட்டவிரோத உர தொகுதிகள் கைப்பற்றல்

கம்பஹா மாவட்டத்திலுள்ள ஹூனுமுல்ல பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் உர தயாரிப்பு தொழிற்சாலையில் இருந்து சட்டவிரோத உர தொகுதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

நுகர்வோர் அதிகார சபை மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது காலாவதியாகும் காலத்தை சட்டவிரோதமாக நீடித்து மீள் பொதி செய்யப்பட்ட ஒன்பது மெற்றிக் தொன் உர தொகுதிகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டுள்ளன.

15 மில்லியன் ரூபா பெறுமதியான இந்த உரத் தொகுதிகள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவை. இவை அடுத்த வருடம் காலாவதியாக இருந்தவை. இவற்றின் காலாவதி காலம் 2020 ஆக மாற்றப்பட்டு, தயாரிக்கப்பட்ட நாட்டின் உரிமமும் மாற்றப்பட்டு, மீள பொதி செய்யப்பட்டமை இதன்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தொழிற்சாலையின் உரிமையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நுகர்வோர் அதிகார சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment