காணியற்ற தலைமன்னார் மக்களுக்கு காணிகள் வழங்கும் நிகழ்வு! - News View

About Us

About Us

Breaking

Thursday, April 5, 2018

காணியற்ற தலைமன்னார் மக்களுக்கு காணிகள் வழங்கும் நிகழ்வு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால், காணியற்ற தலைமன்னார் மக்களுக்கு அரசாங்கத்திடமிருந்து காணிகள் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (02) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முன்னாள் வட மாகாண சபை உறுப்பினரும், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேகச் செயலாளருமான றிப்கான் பதியுதீன், மன்னார் பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எச்.எம்.முஜாஹிர், செய்யது அலி முகம்மது நயீம் மற்றும் இலங்கை சட்டஉதவி ஆணைக்குழுவினர், காணி சீர்திருத்த ஆணைக்குழுவினர் ஆகியோர் கலந்துகொண்டு இக்காணிகளுக்கான உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்தனர். இன, மத வேறுபாடின்றி தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களுக்கு இந்த காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment