பிரபல ஊடகவியலாளர் கீத் நொயார் (Keith Noyahr) 2008.05.22 அன்று தெஹிவளையில் வைத்து கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக இராணுவ புலனாய்வு பணிப்பாளராக இருந்த ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தலுக்கு உடந்தையாக செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் குற்றவிசாரணை திணைக்கள அதிகாரிகளால் விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளார். இராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் கைதானார்.
தற்போது அவர் குற்றவிசாரணை திணைக்கள அதிகாரிகளின் பாதுகாப்பில் குறித்த மருத்துவமனையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பாக கல்கிசை நீதிமன்ற நீதவானுக்கு அறிவிக்கவுள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
No comments:
Post a Comment