அன்புப் பொதுமக்களுக்கு, காத்தான்குடி சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல் - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 6, 2018

அன்புப் பொதுமக்களுக்கு, காத்தான்குடி சம்மேளனம் விடுக்கும் முக்கிய அறிவித்தல்

அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்று (06) செவ்வாய்க்கிழமை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் எமது பிரதேசத்துக்குப் பொறுப்பான உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கும் சம்மேளனப் பிரதிநிதிகளுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தற்போது நமது நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் இனவாத வன்முறைகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் இனவாத தாக்குதல்கள் சம்பந்தமாக அரசாங்கமும் பொலிஸ் திணைக்களமும் மிகக் கவலையடைவதாக உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார். மேலும் ஏனைய பிரதேசங்களுக்கு இவ்வன்முறைச் சம்பவங்கள் பரவாத வகையில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் பல முக்கிய விடயங்கள் ஆராயப்பட்டன.

இன வன்முறையைத் தூண்டும்வகையில் நடந்துகொள்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கெதிராக கடும் சட்டநடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டது. அதாவது இன வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு இலங்கையின் சட்ட ஏற்பாடுகளின்படி பிணை வழங்கமுடியாத ஆறுமாத காலத்திற்குக் குகறையாத கடூழிய சிறைத்தண்டனை வழங்கப்படும் எனவும், சட்ட நடவடிக்கைகள் அனைத்தும் உயர் நீதிமன்றத்திலேயே மேற்கொள்ளப்படுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, தற்போது நமது முஸ்லிம் சமூகம் எதிர்கொண்டுள்ள இக்கட்டான சூழ்நிலையில் பொதுமக்கள் மிக அவதானதாக நடந்துகொள்ளுமாறும், வன்முறைகளைத் தூண்டும் வகையில் எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபட வேண்டாமெனவும், அல்லாஹ்விடத்தில் அதிகமதிகம் இஸ்திஃபார் துஆ பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறும் அன்பாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

No comments:

Post a Comment