ஒரு தனி நபர் செய்யும் தவறுக்காக அந்த சமூகத்தின் மீது வன் முறையை பிரயோகிக்க கூடாது-: கண்டியிலுள்ள பௌத்த மத தலைவர்கள் பலரும் வேண்டுகோள் - News View

About Us

About Us

Breaking

Monday, March 5, 2018

ஒரு தனி நபர் செய்யும் தவறுக்காக அந்த சமூகத்தின் மீது வன் முறையை பிரயோகிக்க கூடாது-: கண்டியிலுள்ள பௌத்த மத தலைவர்கள் பலரும் வேண்டுகோள்

ஒரு தனி நபர் செய்யும் தவறுக்காக அந்த சமூகத்தின் மீது வன் முறையை பிரயோகிக்க கூடாது என கண்டியிலுள்ள பௌத்த மத தலைவர்கள் பலரும் அறிக்கைகளை விட்டுள்ளனர்.

ஒரு தனி நபர் தவறு செய்தால் தவறு செய்தவரை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனையை பெற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர அதற்காக அந்த சமூகத்தின் மீது வன் முறையை பிரயோகிப்பது, அந்த சமூகத்தின் மத வழிபாட்டு தளங்களை தாக்குவது போன்ற நடவடிக்கைகளை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்த நாட்டில் பௌத்தர்கள், இந்துக்கள், முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் அனைத்து சமூகத்தினரும் வாழுகின்றனர்.

இந்த நிலையில் ஒரு சமூகத்தை தாக்குவது, அவர்களின் சொத்துக்களை அழிப்பது, மத வழிபாட்டுத்தளங்களை தாக்குவது இவ்வாறான செயல்களை ஒரு போதும் பௌத்த மதம் ஏற்றுக் கொள்ள வில்லையெனவும் தெரிவித்துள்ளனர்.

இந்த நேரத்தில் அனைவரும் பொறுப்புடன் நடந்து கொள்ளுமாறு பௌத்த மத தலைவர்கள் மேலும் கேட்டுள்ளனர்.

எம்.எஸ்.எம்.நூர்தீன்

No comments:

Post a Comment