டெப் மற்றும் மடிக்கணினி வழங்கும் திட்டம் மாணவர்களுக்கு நிறைவேற்றப்படும். - News View

About Us

About Us

Breaking

Monday, March 5, 2018

டெப் மற்றும் மடிக்கணினி வழங்கும் திட்டம் மாணவர்களுக்கு நிறைவேற்றப்படும்.

டெப் மற்றும் மடிக்கணினி வழங்கும் வேலைத்திட்டங்கள் சில காரணங்களால் தடைப்பட்டுள்ளன. எவ்வாறேனும் அப்பணியை நிறைவு செய்வோம் என கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

எமக்கு அமைச்சு பொறுப்பு வழங்கப்பட்டதன் பின்னர் கல்வி அமைச்சு மற்றும் கல்வி செயற்பாட்டுக்குரிய சிறப்புத்தன்மையினை மேலும் விருத்தி செய்வதனையே முதல் நடவடிக்கையாக மேற்கொண்டோம். 

அதன் முதற்கட்டமாக கல்வி நிர்வாக சேவையில் காணப்பட்ட 852 என்கிற பற்றாக்குறை நிலையினை சீர்செய்வதற்கான நடவடிக்கை எடுத்ததோடு, புதிதாக நான்காயிரம் அதிபர்களை நியமிப்பதற்கும், ஆயிரத்து நூற்றுத்தொண்ணூறு ஆசிரியர்களை சேவையில் இணைத்துக் கொள்வதற்கும் நடவடிக்கை எடுத்தோம். 

மேலும் முக்கியமாக ஆறாம் வகுப்பிற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு லட்சத்து ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மடிக்கணினிகளை வழங்குவதற்கான அனைத்து பணிகளும் நிறைவடைந்துள்ளன. 

அத்தோடு உயர்தர மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஒரு லட்சத்து தொண்ணூற்று ஐயாயிரத்துக்கும் அதிகமான டெப் வழங்கும் வேலைத்திட்டங்கள் நிறைவெய்தியுள்ள நிலையில், சில காரணங்களால் அப்பணிகள் தடைப்பட்டுள்ளன. அப்பணிகளை வெகுவிரைவாக நிறைவு செய்வோம் என அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment