கிழக்கு மாகாணத்தில் பல பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 6, 2018

கிழக்கு மாகாணத்தில் பல பிரதேசங்களில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு

மத்திய மாகாணத்தின் திகண, தெல்தெனிய உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இனவாதத் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், அம்பாறை மாவட்டம் முழுவதும் இன்று (06) ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

பொத்துவில் தொடக்கம் மருதமுனை வரையிலான முஸ்லிம்கள் பெரும்பான்மைகயாக வாழும் பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, சாய்ந்தமருது, கல்முனை மற்றும் சம்மாந்துறை உள்ளிட்ட பல பகுதிகளில் ஹர்த்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இன்று (06) காலை சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசலில் ஒன்று கூடிய ஊர் மக்கள், வன்முறைகளால் பாதிக்கப்பட்ட திகண, தெல்தெனிய உள்ளிட்ட முஸ்லிம் மக்களுக்காக விசேட பிரார்த்தனையில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

ஹர்த்தால் நடவடிக்கை காரணமாக இந்த பிராந்தியத்திலுள்ள வர்த்தக நிலையங்கள், அரச அலுவலகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதோடு, வாகனப் போக்குவரத்துக்குளும் முற்றாகத் தடைப்பட்டுள்ளன.

பாடசாலைகளுக்கு மாணவர்கள் வருகை தராத நிலையும், வங்கிகள், அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் என்பன மூடப்பட்டுள்ளது. உள்ளுர், வெளியூர் போக்குவரத்துகள் இடம்பெறவில்லை.
இன்று (06) அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களில் விசேட துஆ பிரார்த்தனையுடன் பூரண ஹர்தாலும் அனுஷ்டிக்கப்பட்டது.

இன்று அதிகாலை அக்கரைப்பற்று கல்முனை பிரதான வீதியில் தடைகள் ஏற்படுத்தப்பட்டிருந்ததுடன் சில இடங்களில் டயர்களும் எரிக்கப்பட்ட நிலையினால் பிரதான வீதியூடான போக்குவரத்து ஸ்தம்பிதம் அடைந்தது.

இதேவேளை அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் பாலமுனை ஆகிய பிதேசங்களின் பிரதான வீதியில் அமைந்துள்ள சில பாடசாலைகள் மாணவர்களின் வரவு குறைந்தனால் கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டு பாடசாலைகள் இயங்காமல் இருந்தன.
இப்பகுதியில் கடைகள், தனியார் அரச வர்த்தக நிலையங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் வங்கிகளும் மூடப்பட்டிருந்தன.

அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை ஆகிய பிரதேசங்களின் பள்ளி வாயல்களில் விசேட துஆ பிரார்த்தனை இடம்பெற்றதுடன், முஸ்லிம் மக்கள் மிகவும் நிதானத்துடனும், பொறுமையுடனும் செயற்பட்டு தங்களது சகோரர்களுக்காக பிரார்தனை செய்யுமாறும் இதன் போது உலமாக்களினால் வலியுறுத்தப்பட்டன.

இதேவேளை ஹர்த்தால் இடம்பெறாத ஆலையடிவேம்பு பிரதேசத்தில் உள்ள அரச வங்கியும் மூடப்பட்டிந்தது.

No comments:

Post a Comment