கடந்த பெப்ரவரி 26 ஆம் திகதி இரவு அம்பாறையில் இடம்பெற்ற அசம்பாவிதம் மற்றும் திகன பிரதேசத்தில் நேற்று (05) இடம்பெற்ற கலவரம் தொடர்பில் அரசாங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளதோடு, நாட்டில் சட்ட ஒழுங்கை பேணுமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.
இனவாதிகளால் நேற்று (05) முன்னெடுக்கப்பட்ட குறித்த கலவர சம்பவத்தில், முஸ்லிம்களுக்கு சொந்தமான கடைகள், சொத்துகள், வீடுகள் என்பன தீ வைக்கப்பட்டதோடு, பள்ளிவாசல்கள் பலவு சேதமாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த சம்பவத்தை அடுத்து, நேற்று (05) மாலை முதல் இன்று (06) அதிகாலை வரை கண்டி நிர்வாக மாவட்டத்தில் பொலிஸ் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் ஊரடங்கு நிலையையும் மீறி, தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில், நேற்று (05) நள்ளிரவு முதல், பிரதமரின் இல்லமான அலரி மாளிகைக்கு முன்னால் திரண்ட மக்கள், குறித்த நிலைமையை உடனடியாக கட்டுப்பாட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமாறு தெரிவித்து, அமைதியான ஆர்ப்பாட்டமொன்றையும் முன்னெடுத்திருந்தனர். நள்ளிரவு கடந்து இன்றும் (06) குறித்த அமைதி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
குறித்த விடயத்தை கருத்திற் கொண்டு கண்டியிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்றைய தினம் (06) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணைகளையும் முன்னெடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பொலிசாருக்கும் பாதுகாப்பு பிரிவினருக்கும் உத்தரவிட்டுள்ள நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் அரசாங்கம் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையை அரசாங்க திணைக்களம் வெளியிட்டுள்ளது.
அரசாங்க திணைக்களம் விடுத்துள்ள அறிவித்தலிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கை வருமாறு...
மதவழிபாட்டு தலங்கள் வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கு சேதமேற்படுத்தப்பட்ட அம்பாறை மற்றும் திகன பிரதேசத்தில் சமீபத்தில் இடம்பெற்ற அமைதியை சீர்குலைத்து குழப்பத்தை ஏற்படுத்திய சம்பவங்களை இலங்கை அரசாங்கம் கடுமையாகவும் முற்றாகவும் கண்டித்துள்ளது.
சமூக ஐக்கியத்திற்கு தடையேற்படுத்தும் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்துவதற்கு தெளிவான நிலைப்பாடு முஸ்லிம் மற்றும் ஏனைய சம்பவங்களுக்கிடையில் விசேடமாக ஊடக வலைப்பின்னல் மற்றும் இணையத்தளங்கள் மூலம் சிலரினால் மேற்கொள்ளப்படும் தவறாக வழிநடத்தும் சிறிய தகவல்கள் மற்றும் குரோதத்தன்மையுடனான வேறுபாடுகளை முன்னெடுப்பதற்கான முயற்சிகளை அரசாங்கம் கடுமையாக கண்டித்துள்ளது.
இவ்வாறான வெறுக்கத்தக்க மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களை முன்னெடுக்கவேண்டாம் என்று இலங்கையிலுள்ள அனைத்து பிரஜைகளிடமும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
மூன்று தசாப்தகாலங்களில் குழப்பத்தினால் பாதிக்கப்பட்ட நாடு மற்றும் நாட்டவர் என்ற ரீதியில் நாம் இவ்வாறானவற்றிற்கு இடமளிக்கக்கூடாது. இவ்வாறான வெறுக்கத்தக்க மற்றும் உண்மைக்கு புறம்பான தகவல்களினால் ஏமாந்துவிடக்கூடாதென்று இலங்கையிலுள்ள அனைத்து பிரஜைகளிடமும் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
மூன்று தசாப்த காலத்திற்குள் குழப்பநிலையின் காரணமாக பாதிக்கப்பட்ட நாடு , இனத்தவர் என்ற ரீதியி;ல் நாம் மீண்டும் மீண்டும் இவ்வாறானவற்றிற்கு இடமளிக்காது ஒதுங்கியிருக்கவேண்டும். குற்றங்களை புரிவோர்; சட்டம் மற்றும் சமாதானத்தை சீர்குலைப்போருக்கு எதிராக நிலையான மற்றும் கடுமையான சட்டத்தை முன்னெடுப்பதற்கு அரசாங்கம் பின்வாங்காது.
அனைத்து பிரஜைகளுக்குமான உரிமையை பாதுகாத்து அனைத்து சுதந்திரத்திற்கான சந்தர்ப்பத்தையும் அனைவரும் அனுபவிக்ககூடிய மற்றும் ஒழுக்கங்களை மதிக்கும் நிலையான சமாதான மற்றும் முற்போக்கு சமூகத்தை கட்டியெழுப்புதவற்கு அனைத்து பிரஜைகளினதும் ஒத்துழைப்பையும் புரிந்துணர்வையும் இனமத பேதங்களுக்கு அப்பால் அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.
சமூக கட்சிகள் ,அரசியல்வாதிகள் ,சமூகத்தலைவர்கள் , சிவில் சமூகம் மற்றும் ஊடகத்தை கொண்ட இலங்கையில் உள்ள அனைத்து பிரஜைகளும் எத்தகைய குழப்பநிலையையும் நிராகரித்து சமாதானம் மற்றும் ஐக்கியத்தின் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
சுதர்சன குணவர்த்தன
சட்டத்தரணி
அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்
No comments:
Post a Comment