கட்டுகஸ்தோட்டையிலுள்ள பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்கள் தாக்குதல் - News View

About Us

About Us

Breaking

Monday, March 5, 2018

கட்டுகஸ்தோட்டையிலுள்ள பள்ளிவாசல் மற்றும் வர்த்தக நிலையங்கள் தாக்குதல்

நேற்றிரவு முதல் நிலவி வரும் வன்முறை சூழலின் எதிரொலியாக கட்டுகஸ்தோட்டையில் உள்ள கஹல்ல மஸ்ஜிதுல் ரஹ்மானியா பள்ளிவாசல்கள் மற்றும் வர்த்தக நிலையங்கள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, பள்ளிவாசல் குண்டர்களால் முற்றாக சேதத்துக்குள்ளக்கப்பட்டதுடன், பள்ளிவாசலுக்கு பொறுப்பான மௌலவி இரண்டாம் மாடியிலிருந்து குதித்து தப்பியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதுமட்டுமன்றி, முச்சக்கர வண்டிகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் இனவாதிகளின் கல்வீச்சு மற்றும் தாக்குதலுக்குள்ளாகியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தில் வாகனங்கள் சிலவும் தாக்குதலுக்குள்ளாகியுள்ள அதேவேளை அருகில் உள்ள பகுதிகளிலும் பலரால் அச்சறுத்தல் ஏற்படுத்தி வருவதாக அறியமுடிகிறது.

எனினும், விசேட அதிரடிப்படையினரைக் கொண்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் தொடர்ந்து தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment