என்னிடம் கற்ற மாணவன் உயிரிழந்த திடுக்கிடும் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன். - News View

About Us

About Us

Breaking

Tuesday, March 6, 2018

என்னிடம் கற்ற மாணவன் உயிரிழந்த திடுக்கிடும் செய்தி கேட்டு அதிர்ந்து போனேன்.

அப்துல் பாசித் இயற்கை எய்திய செய்தி எனது இன்னுமொரு மாணவன் மூலம் திகனையில் இருந்து வந்தது. 

என்னிடம் கற்ற மாணவன் மரணமான முதல் அனுபவம், தாங்கிக் கொள்ள முடியாத கவலையும் ஆத்திரமும் ஏற்பட்டது.

என் ஊடகக் கல்லூரியின் (JM MEDIA COLLEGE) 5ஆம் குழு மாணவன் அவன்,

மிக திறமையானவன், ஊடகத்துறையில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்டவன்,

இறுதியாக ஞாயிற்றுக்கிழமை (4) கல்லூரியில் சந்தித்தான். 

Sir Sir என்று நிறைய கேள்வி கேற்பான்... அவன் கேள்விகளுக்கு எல்லையே இல்லை.

என்ன வேளை சொன்னாலும் அழகாகவும் நேர்தியாகவும் நிறைவு செய்வான்.

சிறந்த பணிவும் பண்பாடும் நல்ல குணமும் அவன் உருவத்தில் பிரதிபலிக்கும்.

எனக்கு தெரிந்த அளவில் அவன் யார் மனதையுமே நோகடித்ததாக இல்லை.

எந்த விடயத்திலும் தயங்காமல் முன்நிற்பான். ஒலிவாங்கின்னா அவனுக்கு அவ்வளவு பிரியம்.

ஒரு சிறந்த ஊடகவியலாளனாக வர வேண்டும் சமுகத்திற்கு நிறைய செய்ய வேண்டும் என்ற அவா அவன் உள்ளத்தில் ஆழ பதிந்திருந்தது.

இறைவனின் நியதி பாஸித்தை அவன் பக்கம் அழைத்துக்கொண்டான், 

இறைவா பாஸித்தை நீ பொருந்திக் கொள்வாயாக.

அவரது பாவங்களை மன்னித்து மேலான சுவனத்தை வழங்குவாயாக!

சிறுபான்மை மக்களை நீ பாதுகாத்தருள்வாயாக!

ராஷித் மல்ஹர்தீன்,
ஊடகவியலாளர்

No comments:

Post a Comment