விஷேட தூதுவரான மிரெட் ராட் அல் ஹூஸைன் - வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சந்திப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, March 5, 2018

விஷேட தூதுவரான மிரெட் ராட் அல் ஹூஸைன் - வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் சந்திப்பு

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவரான ஜோர்தானைச் சேர்ந்த இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவரான ஜோர்தானைச் சேர்ந்த இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன் , மூன்றுநாள் விஜயத்தை மேற்கொண்டு இன்று இலங்கை வந்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள விசேட தூதுவர் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவை இன்று சந்தித்தார்.

இலங்கை அரசாங்கம் நிலக்கண்ணிவெடிகள் ஒப்பந்த திட்டத்தில் கைச்சாத்திட்டமைக்கு வாழ்த்துத்தெரிவித்த விசேட தூதுவர், இந்த உடன்படிக்கையை வலுவூட்டுவதில் இலங்கை முக்கிய பங்காற்றும் என்றும் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment