மொரகஹகந்த மற்றும் மகாவலி நீரை வடமேல் மாகாணத்திற்கு கொண்டு செல்ல நீர்ப்பாசனத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. இதன் நிர்மாணப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இத்திட்டத்திற்கு 600 கோடி ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக திட்டப் பணிப்பாளர் பொறியியலாளர் ஜி.எம்.ஆர்.ஏ. பெரேரா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கு அமைவாக இத்திட்டம் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment