பொதுமக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் இரண்டாவது பிரிவை அமுல்படுத்தும் வகையில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன ஒரு வாரத்திற்கான அவசரகாலநிலையை பிரகடனம் செய்துள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களில் ஏற்பட்ட மோசமான நிலைமைகள் இதனால், இடம்பெற்ற உயிர் மற்றும் சொத்து சேதங்கள், இனங்களுக்கிடையிலான மோதல்கள், சொத்துக்கள், வழிபாட்டுத் தலங்கள், வாகனங்கள் என்பனவற்றின் மீதான தாக்குதல்கள் போன்றவற்றை கருத்திற் கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறான சம்பவங்களுக்கு கூட்டிணைந்த குழுக்களின் ஒத்துழைப்பும் கிடைத்துள்ளது. இந்த நிலையை தணிக்கும் முக்கிய நடவடிக்கையாக அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போதைய நிலையை அமைதியாக பேணுவதற்காக அத்தியாவசியமான சட்ட அதிகாரங்கள் பொலிஸாருக்கும், முப்படையினருக்கும் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment